உறைபனி குளத்தில் விழுந்த நாயை காப்பாற்ற எஜமான் செய்த வைரல் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை பனிப்புயல் தாக்கியதை தொடர்ந்து டெக்சாஸ், லூசியானா, கென்டக்கி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உறைபனி குளத்தில் விழுந்த தனது செல்லப்பிராணியை காப்பாற்றியதற்காக இணையத்தில் அதன் உரிமையாளர் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
டெக்ஸாஸ் மாகாணத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பனிப்பொழிவு நீடித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பனிப்பொழிவால் சுமார் 30 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீட்டு பொருட்கள் பல பனியால் உறைந்து அப்பகுதி முழுவதும் உறைபனி சூழ்ந்து காணப்படுகின்றது.
இந்த நிலையில், டெக்ஸாஸில் சவுதியில் வசிக்கும் டான் ஹோம்ஸ் செல்லப் பிராணிகளை வளர்க்கும் மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில், தனது நாய் கிறிஸ்டி குளத்தை மூடிய பனிக்கட்டி வழியாக விழுந்த பயங்கரமானதாக இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.