அமெரிக்காவின் பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து பல போராட்டங்கள் நடந்து வருகின்றது. இதனால் பல இடங்களில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 26-ம் தேதி கத்தியுடன் சுற்றி திரிந்ததாக வால்டர் வாலஸ் என்ற கருப்பின இலைகுனிற் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்று உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் விசாரணையில் வால்டர் வாலஸ் மாநிலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்துள்ளது. இதனால் இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவரை போலீசார் சுட்டு கொன்றதால் பொதுமக்கள் பெரும் கோவத்தில் இருக்கின்றனர். இதற்கு நீதி வழங்க வேண்டும் என பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.