பல வருடங்கள் தெரிந்த ஒருவருடன் பேசுவது போலவே இருந்தது: வித்யு மகிழ்ச்சிப் பெருமிதம்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி காமெடி நடிகையான வித்யூலேகா ராமன் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன்னுடைய வருங்கால கணவர் சஞ்சய்-யை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். அவருக்கு அதிக அளவு வாழ்த்துக்கள் ரசிகர்களிடமிருந்து கிடைத்து வருகிறது.
எங்களது நிச்சயதார்த்தம் ஆகஸ்டு 26-ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு ‘Sufidar’ கோவிலில் நடைபெற்றது. அவர் சிந்தி என்பதால் எங்களது நிச்சயதார்த்தம் Sufidar கோவிலில் நடைபெற்றது. இது ரோகா நிகழ்ச்சி தான் என்றாலும் நிச்சயதார்த்தம் போன்றது தான் என வித்யூ லேகா தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் சந்தித்தது ஒரு டேட்டிங் ஆப் மூலமாகத் தான். எனக்கு அதில் பெரிய நாட்டமில்லை என்றாலும் நண்பர்கள் வற்புறுத்தலால் சேர்ந்தேன். எனினும் எங்களுக்கு ஒருவரையொருவர் பிடித்திருந்தது. பல வருடங்கள் தெரிந்த ஒருவருடன் பேசுவது போலவே இருந்தது.
வித்யூ ராமன் மற்றும் சஞ்சய் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்திருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு சில விஷயங்கள் மீது பொதுவாக அதிக ஆர்வம் இருக்கிறது. நான் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்தேன். அதே நேரத்தில் அவர் கீட்டோ டயட் மற்றும் அந்த உணவு முறை சார்ந்த ஒரு தொழில் செய்து வருகிறார். நான் அவரிடம் லோ – கார்ப் மற்றும் கீட்டோஜெனிக் உணவு பற்றி கேட்டேன். அவர் என்னுடைய பிட்னெஸ் பயணத்தில் அதிகம் உதவினார். உணவு, டயட் மற்றும் ஃபன் என அனைத்தையும் நாங்கள் சேர்ந்தே செய்தோம்.

அவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பார்ப்பதில்லை என்பதால் அவருக்கு என்னை பற்றி எதுவும் தெரியவில்லை. என்னை பற்றி அவர் கூகுள் செய்து பார்த்த போது தான் அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது
அவர்களது அப்பா மற்றும் அம்மா இருவரும் என்னை அதிகம் ஊக்குவிக்கிறார்கள். இதுவரை சினிமாவில் செய்திருப்பது பற்றி அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள்.
இந்த கொரோனா பிரச்சனை முடிந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்திருக்கிறோம். நமது அன்பானவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். இவ்வாறு வித்யூ பேசினார்.




