தரையில் உட்கார்ந்து சாப்பிடும் நம் வழக்கம் இப்போது மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. பத்து வயது குழந்தைகளிடம் சம்மணம் போட்டு அமர்வது என்று கேட்டால் தெரியாது… சம்மணம் போட்டு அமர்வது என்ன பலன்களை தரும்.. பார்ப்போம்…
நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்றுள்ள் பழக்க வழக்கங்கள் எல்லாமே அறிவியல் சார்ந்த மருத்துவம் சார்ந்த நன்மைகளை நமக்கு ஏற்படுத்தும் அம்சங்கள் தான். அவை அனைத்தையுமே நம்மில் சிலர் மூடப்பழக்க வழக்கம் என்று கேலி செய்கிறோம். அல்லது பழமை என்று வாதம் செய்கிறோம். ஆனால் நம் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் நமக்கு நன்மை மட்டுமே தரக்கூடிய அமசங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ‘சம்மணங்கால்’.
உணவு அருந்தும் போது அமர வேண்டிய நிலைதான் சம்மணங்கால். பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவதைத் தான் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
கால்களை மடக்கி நாம் கீழே உட்காருவது ஒருவித யோக நிலை. அதற்கு பெயர் சுக ஆசனம்…அல்லது பாதி பத்மாசனம்.
இந்த நிலையில் நாம் அமரும்போது முதுகுத் தண்டுவடம் நேராகு, கழுத்து நரம்புகள் சரியான நிலைக்கு செல்லும். இந்த நிலை நம் செரிமான உணர்வை தூண்டும் என்கிறார்கள் நம் முன்னோர்கள். மேலும் இந்த நிலை நமது முதுகுத்தண்டுவடத்தின் கீழ் பகுதியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி சீரான சுவாசம், தசைகளின் விரிவாக்கத்தை குறைத்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. தரையில் தட்டு இருப்பதால் இயல்பாகவே குனிந்து தான் சப்பிடஉடியும்.
நாம் குனிந்து நிமிர்ந்து சாப்பிடும் போது நம் வயிற்று தசைகள் சுருங்கி விரியும். இதேபோல் நம் செரிமான உறுப்புகளும் சுருங்கி விரியும். இது நாம் சாப்பிடும் உணவை எளிதாக செரிக்கவைக்க உதவும் கால்களை படிமானமாக தரையில் இருக்குமாறு உட்காரும்போது ஏற்படும் நிமிர்வு நிலை மூளைக்கும் வயிற்றுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது. இதனால் தேவையான அளவு உணவு உட்கொண்ட பிறகு போதும் என்ற சிக்னல் மூளையில் இருந்து கிடைக்கிறது. இதனால் அதிகப்படியான உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகிறரு.
நாம் மேசையில் காலகளை தொங்கவிட்டு கொண்டு உட்காரும் போது அதிகப்படியான ரத்த ஓட்டம் கால்களுக்கு செல்கிறது. ஆனால் சம்மணங்கால் போட்டு உட்காருவதால் ஏற்படும் அழுத்தம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீரான நிலையில் வைக்கிறது. தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது முதுகுத் தசைகள், இடுப்பு, மற்றும் கோர் தசைகள் எல்லாம் நீட்சியடைகின்றன. இந்த தொடர்ச்சியான நீட்சிகள், மூட்டுகளை மடக்கி உட்கார்தல் ஆகியவை நமது இடுப்பை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது. இது முதுகு வலி, மூட்டு வலி போன்றவற்றை குறைக்கிறது.
இப்படி உடல் ரீதியாக பல நன்மைகளை ஏற்படுத்தக் கூடிய சம்மணங்கால் போடுவதை நாம் மறந்தேப்போய் விட்டோம். நாற்காலியில் அதிகநேரம் உட்காருவது பல நோய்களை நாமே வருந்தி அழைப்பத்ற்கு சமம். அதிலும் சாப்பிடும் போது நாற்காலியில் அமர்வது இன்னும் மோசம். நாகரீகம் என சப்பைக் கட்டு கட்டுவதும், டைனிங் டேபிளில் அமர்வது தான் ஸ்டேட்டஸ் என பீட்டர் விடுவதும் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம். எனவே மிகவும் பயனுள்ள நம் பாரம்பரிய பழக்கவழக்கங்களை நாமும் கடைப்பிடிப்போம்… நம் பிள்ளைகளுக்கும் பழக்கப்படுத்துவோம். வீட்டு வாசலில் சாணம் தெளிப்பது முதல் சூரிய வழிபாடு வரை நம் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் எல்லமே அறிவியல் தான்… பச்சைத்தமிழனாக இருந்தால் இதைப் பரப்புங்கள் என ஸ்டேட்டஸ் வைப்பதை விட.. இதுபோன்ற பயனுள்ள விசயங்களை கடைப்பிடிப்போம்.
சுரா-