அனைத்து கலைத்துறையினரிடம் ஒரு விவாதம் உள்ளது அது கூத்தும் பரதமும் ஒன்றாகிவிடுமா என்று ஆண்டாண்டு காலமாக இங்கு விவாதங்கள் நடைபெற்று கொண்டு இருக்க அனைத்தும் கலை தான். அனைத்தும் நடனம் தான் என்று ஆடல் கலையை அரங்கேற்றுகிறார்கள் இந்த இரு பெண்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸை சேர்ந்த இப்பெண்கள் பரதம் மற்றும் ஹிப்-ஹாப் என இரண்டையும் ஒரே நேரத்தில் ஆடி பார்க்கும் மக்களை அசரடித்துவிடுகின்றனர். பார்க்கும் நமக்கே மெய் சிலிர்த்து போகிறது, என்ன ஒரு திறமை என்று கேட்க தோன்றுகிறது. இவர்களின் நடன வீடியோக்கள் தான் தற்போது சமூக வலை தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.