கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வருவதால் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்ககை 2 லட்சத்து 68ஆயிரத்து 285 ஆக உள்ளது. சென்னைக்கு அடுத்தாற்போல் குறிப்பாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருகினறனர். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கொரோனா முகாம்களையும் தமிழக அரசு அதிகரித்துவருகிறது.
இந்தநிலையில், நாளை மதுரையில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகளையும், வடபழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா முகாமினை நேரில் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்யவுள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

எனவே முதல்வரின் வருகையையடுத்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ள அதிகாரிகளுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து விடுப்பட்ட அதிகாரிகளுக்கு இன்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் வினய் தகவல் தெரிவித்துள்ளார்.