விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஒரு ஆற்றின் நடுவில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியானது. இந்த அழகான புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தனது கேமிராவில் பதிவு செய்துள்ளார்.
2020 ஐ.பி.எல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் பெங்களூர் அணியின் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் நேரத்தை கழித்து வருகிறார். (நேற்று) கடந்த ஞாயிற்றுக்கிழமை, சூரியன் மறையும் அந்த மாலை வேளையில் அவர்கள் ரசித்து மகிழும் புகைப்படம் இப்பொது சமூக வலைதளங்களில் பல லைக்களை தெறிக்கவிட்டு வருகிறது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஒரு ஆற்றின் நடுவில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியானது. இந்த அழகான புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தனது கேமிராவில் பதிவு செய்துள்ளார். விராட் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவரும் ஐ.பி.எல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்கள்.
அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி தாங்கள் பெற்றோராகும் அந்த அன்பான தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் அவர்கள் அந்த குட் நியூஸை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.அதன் பின்னர், அனுஷ்கா மற்றும் விராட் கோலியின் இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் பகிரப்பட்ட ட்விட்டர் உள்பட பல சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அதனை ரசித்தும்,அன்பான கருத்துக்களை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.