சவுத்தாம்ப்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் பேட்டிங் பரபரப்பானது பாக்கிஸ்தானை ஒரு சிறந்த ஆட்டத்தைஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில், ஸ்டூவர்ட் பிராட் தனது அற்புதமான பந்து வீச்சின் மூலம் பாகிஸ்தானை வீழ்த்தினார்.

126/5 முதல் நாள் ஆட்டம் முடிவு பெற்ற நிலையில் (நீண்ட மழை தாமதத்திற்குப் பிறகு) இரண்டாம் நாள் மீண்டும் தொடங்கியது மேலும் ஒரு பெரிய ஸ்கோரை அடிப்பதற்கு பாபரின் சிறப்பான ஆட்டம் மிகவும் தேவைப்பட்டது, மேலும் பாபர் அவர் ஆட்டத்தை ஆட சிறப்பாக முயற்சித்த போதிலும், பிராட் அவரை விட சிறந்தவராக இருந்தார் .
பாகிஸ்தானின் முதல் இன்னிங்சின் 64 வது ஓவரில் இது நடந்தது. மிகுந்த துல்லியமாக வீசப்பட்ட பிராட் பந்தில் பாபரின் விக்கெட் விழுந்தது .இந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ல் வெளியிட்டது.
300 ரன்களை தாண்டுமா பாகிஸ்தான்?
பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி இரண்டாவது முறையாக ஒரு முக்கியமான டாஸை வென்று, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்,. இருப்பினும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தங்களைத் தாங்களே பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர். தொடக்க ஆட்டக்காரர் ஆபிட் அலி 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தபின்பு வரிசையாக விக்கெட்டுகள் விழத் தொடங்கின
கேப்டன் அஸ்ஹர் அலி (20), மற்றும், பாபர் அசாம் (47) (முகமது ரிஸ்வான் உட்பட) தவிர, பேட்ஸ்மேன்கள் யாரும் இரட்டை இலக்கங்களை பெற முடியவில்லை. மீண்டும் பெய்தமழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் தற்போது 223/9 என்ற இடத்தில் உள்ளனர். இருப்பினும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 60 ரன்களில் இன்னும் ஆட்டமிழக்காமல் உள்ளார், என்பது தற்போது பாகிஸ்தானுக்கு நிம்மதியான செய்தியாக உள்ளது.




