பிசிசிஐ நிர்வாகம் ஐ.பி.எல் போட்டியை யு.ஏ.இ.யில் நடத்தியதற்காக யு.ஏ.இ கிரிக்கெட் நிர்வாகத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.அபு தாபி,துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய மைதானத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகள் முடிவில் டெல்லி அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.யு.ஏ.இ.யில் இந்த ஐ.பி.எல் போட்டிகளை நடத்தி தந்தமைக்கு பிசிசிஐ நிர்வாகம் யு.ஏ.இ கிரிக்கெட் நிர்வாகத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் பிசிசிஐ வழங்கிய இந்த 100 கோடியை தவிர, 14 பைவ் ஸ்டார் ஓட்டல்களை மூன்று மாதத்திற்கு குத்தகைக்கு எடுத்து இருந்தது. இதன்மூலம் யு.ஏ.இ அரசுக்கு மேலும் வருமானம் கிடைத்துள்ளது.ரசிகர்கள் மட்டும் இந்த போட்டிகளை காண ஏற்பாடு செய்திருந்தால் இன்னும் கோடிகளில் யு.ஏ.இ புரண்டு உருண்டு இருக்கும்.ஐ.பி.எல் போட்டிகளை நடத்த இத்தனை கோடியா என்று கிரிக்கெட் ரசிகர்கள் வாய்யை பிளந்து மூட மறுத்துவிட்டனர்.