விஜய் ஹசாரே கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக கிரிக்கெட் அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு ஆஸ்திரேலியா தொடரின் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்திலும் சிறப்பாக விளையாடினார் நட்டு. அப்படி இருந்தும் கூட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நடராஜன் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து விஜய் ஹசாரே கோப்பையில் தமிழகம் சார்பில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கேட்டிருந்தார் நடராஜன். இதை ஏற்றுக்கொண்டு விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட பிசிசிஐ நடராஜனுக்கு அனுமதியளித்துள்ளது.. தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் இடம்பிடித்துள்ளார். அண்மையில்தான் பரோடாவை வீழ்த்திய சையத் முஷ்டக் அலி டி20 கோப்பையை வென்றது தமிழக அணி.




