கேப்டன் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ்-அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை செய்ய உள்ளன. சேலம், 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. இன்று இவு 7.15 மணிக்கு 19-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ்-அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன. நடைபெற இருக்கும் இந்த போடடங கோவை கிங்ஸ் அணி சேலத்தை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழைகிற ஆர்வத்தில் இருக்கிறது. சேலம் அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.