இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் ஒவ்வொரு துறையும் மூடு விழா கண்டு வருகின்றன. அதில் முக்கியமான துறை ஐடி.
கோவிட் 19 எனும் கொடிய கொரோனா மனித உயிர்களுக்கு ஆபத்து தருவது ஒரும்புறம் இருந்தாலும்,மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு தொழிலாளிளுக்கு இந்த கொரோனா மூடுவிழா நடத்தியுள்ளது.

இந்தியாவில் தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிறுத்தி தொழிலதிபர்களுக்கும் வேதனை தந்திருக்கிறது இந்த கொரோனா.
உலகில் எப்போது பொருளாதார மந்த நிலை வந்தாலும் அதில் முதலில் அடிவாங்குது ஐடி தொழிலாளர்கள். காரணமே இல்லாமல் ஐடி ‘ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் இந்த ஐடி நிறுவனங்களுக்கு தற்போது சொல்லவா வேண்டும். கொரோனா காலத்தை தங்களுக்கு சாதகமாக்கி ஊழியர்களின் அளவை குறைக்க ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

ஐடி நிறுவங்கள் தங்கள் ஊழியர்களை வேலையைவிட்டு நீக்க வேண்டும் என்றால் அவர்கள் முதலில் கைவைப்பது பெஞ்சில் இருப்பவர்களை தான். எந்த புரோஜெட்களும் இல்லாமல் காத்திருக்கும் பட்டியலில் இருக்கும் இவர்களுக்கு என்றுமே ஆபத்து தான். ஆனால் இந்த கொரோனா காலத்தில் பெஞ்சில் இருப்பவர்களுடன் சேர்ந்த மற்ற பணியாளர்களுக்கும் ஆபத்து வந்துள்ளது. மற்ற ஊழியர்களை பெஞ்சுக்கு அனுப்பி அவர்களை வேலையில் இருந்து தூக்கும் நடவடிக்கையில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக ஐடி ஊழியர்கள் புலம்புகின்னறனர்.

ஐதராபாத்தில் உள்ள சிடிஎஸ் நிறுவனம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு மட்டும் 18000 ஊழியர்களை பெஞ்சுக்கு அனுப்பி அவர்களை பணியில் இருந்து நீங்களே விலகிச் செல்லுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தொடர் புகார்கள் வருகின்றன.

ஐடி நிறுவனங்களே தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்க வேண்டாம் என்று நினைத்தாலும் அதற்கு சாதகமான சூழல் தற்போது இல்லை. கொரோனா காலத்தில் அனைத்தும் தொழில்களும் முடங்கியுள்ளதால், இந்த ஐடி நிறுவனங்களுக்கு எந்த புதிய புராஜெக்ட்களும் வருவதில்லை.

எனவே இந்த நிறுவனங்கள் வெறும் சர்வீஸ் செக்டாரை நம்பி மட்டுமே தற்போது தங்களது நாட்களை நகர்த்தி வருகிறது. இந்த ஐடி நிறுவனங்கள் மாற்று தொழிலில் உள்ள பெரிய நிறுவனங்களை மட்டும் தான் நம்பி இருக்கின்றன. அந்த நிறுவங்களும் மூடும் நிலை ஏற்பட்டால் ஐடி நிறுவனங்களின் கதி அதோகதி தான். இதனால் தான் ஐடி ஊழியர்களின் பணி ஆபத்தின் விழும்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

சில நிறுவனங்கள் பணி நீக்கம் சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள நிலையில், ஐடி ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் வேலை இழப்புகள் மற்றும் சம்பள குறைப்புகள் உள்ளிட்டவற்றை தடுக்க, சில பகுதிகளில் ஐடி நிறுவனங்களில் அதிக ஆட்களை புதிய பணியமர்த்துவதனையும் நிறுத்தி வைத்துள்ளன.
மேலும் இங்கு சம்பள குறைப்புகள் இருக்கும். மேலும் பெரும்பாலான மக்களுக்கு சம்பள உயர்வு இருக்காது. மூத்த மட்டத்தில் அவர்களை செலவுகளை குறைப்பதற்காக சம்பளத்தினை குறைக்கலாம். உதாரணத்திற்கு ஊழியர்கள் 75,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 20 -25% வரை குறைப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில், ஊழியர்கள் தங்கள் திறமைகளை காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொண்டால் மட்டுமே, தாக்குப்பிடிக்க முடியும் என்கின்றனர், நிபுணர்கள்.
கட்டுரையாளர் – விஜய பிரபா