Friday, March 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

சத்தம் இல்லாமல் சாதிக்கும் ரியல் ஹீரோ…

December 11, 2020
உலகம் இன்று தன்னலம் சார்ந்து தனித்து இயங்கி வருகிறது.தான் வாழ்ந்தால் போதும்,  தன் வயிறு இங்கு நிரம்பினால் போதும் என்று இயங்குகிறார்கள் மக்கள்.ஆனால் இன்று இவரை போன்ற நல்ல உள்ளங்களால் தான் மாமழையும் மடை திறந்து பெய்கிறது.

யார் இந்த JK என்ற ஜெயகிருஷ்ணன் ?


“சட்டத்தின் வழியில் வாழ்வதை விட சத்தியத்தின் வழியில் வாழ்வதே சிறந்தது” இந்த ஒற்றை கொள்கையை கருத்தில் கொண்டு நித்தம் தன் எண்ணங்களை ஏணி படிகளாய் மாற்றியவர் JK குழுமத்தின் தலைவர். J. ஜெயகிருஷ்ணன்.

மரண சாசனத்தின் படி எழுத்தாளர் தெ.சுந்தரமகாலிங்கத்தின் உடல் மருத்துவக்கல்லூரியில் ஒப்படைப்பு

ஒத்தையாக கெத்து காட்டி திமுகவின் 10 தொகுதிகளை தட்டித்தூக்கிய தனியொருவன்… அதிமுகவிற்கு அடித்த ஜாக்பாட்…!

தி.மு.கவில் முட்டிமோதும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் : மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைப்பு


கல்வியாளர்:


JK என்னும் தனி உலகத்தின் கீழ் பல எளிய மாணவர்களின் கல்வி, கண்ணீரை கடந்து வெற்றி கனவை அடைகிறது.நோக்கம் மற்றும் செயல் இவை எல்லாவற்றிற்கு மேலான வளர்ச்சிக்கு கல்விதான் அடிப்படை என்று  உறுதியாக நம்புகிறார். J. ஜெயகிருஷ்ணன். அதன் அடிப்படையில் JK டிரஸ்ட் மூலம் 30க்கு அதிகமான பள்ளிகளை தத்தெடுத்து கழிப்பறைகள் மற்றும் வளங்கள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்கியும், பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களை படிக்க உதவியும் செய்து வருகிறார். வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வி தான் கடைசி வரை துணை நிற்கும்,அந்த கல்வியை கல்வியின் கடவுள் சரஸ்வதிக்கு நிகராய் துணை நின்று அந்த எளிய மாணவர்களை வாழ்வில் உயர செய்கிறார்.


எழுத்தாளர்:


எழுத்தாளர், தொழில் அதிபர், தமிழின் மீதும், இயற்கை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்ற பல பரிமாணங்களை கொண்டு வளம் வருகிறார் ஜெயகிருஷ்ணன். வாழ்வியல் மாற்றங்களால் இன்று உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். நவீனம்,நவநாகரீகம் என்று சொல்லி ஆரோக்கிய வாழ்க்கையை இழந்து நிற்கிறோம்.அப்படிப்பட்ட நம் வாழ்வியலை மீட்டெடுத்து  ‘நல்லுடல்’  ‘நல்லெண்ணம்’  ‘நற்செயல்’ என்ற நோக்கங்களை கொண்டு ஆரோக்கியம் வளர்க்க,மேம்பட்ட வாழ்க்கையை வாழ வழிசெய்யும் வகையில் வளரும் தலைமுறைக்கும் வரும் தலைமுறைக்கும் வழிக்காட்ட தமிழின் முதல் லைஃப் ஸ்டைல் இதழான “புதிய வாழ்வியல்” மலரை நடத்தி வருகிறார்.

நவீன நகர்ப்புற வாழ்வின் அடிப்படையில் அன்றைய காலங்களில் இருந்து நாம் உணர்வுபூர்வமாக வெளியேறிவிட்டோம்.பல அர்த்தமுள்ள மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை நாம் அறிவியலற்றவை என்று கற்பனை செய்கின்றோம்.ஆனால் ஜெயகிருஷ்ணன் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டு நமது பாரம்பரிய பழக்கவழக்கங்களில் பெரும்பாலானவற்றையும், அவற்றிற்கு பின்னால் ஒரு தனித்துவமான அறிவியலை கொண்டு உள்ளது என்றும் கண்டறிந்தார்.அதன் அடிப்படையில் எந்த நவீன கல்வி நிறுவனத்திலும் கல்வி என்பது கற்பிக்கப்படுவதில்லை.அந்த கல்வியானது ஒவ்வொரு பாரம்பரியத்தில் இருந்து பெறப்பட்டது என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு அவர் எழுதிய புத்தகம் தான் “பாரம்பரிய அறிவியல்”.


சமூக செயல்பாட்டாளர் :


கொரோனா பரவல் காரணமாக அனைத்து பொதுமக்களும் வீட்டில் முடங்கி இருந்த காலகட்டத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாது நேரடியாக களம் கண்டு உணவு வழங்கியும்,அடிப்படை தேவைகள் இன்றி சாலையோரங்களில் உறங்கும் அன்றாடவாசிகளுக்கு உணவு மற்றும் போர்வை ஆகியவற்றை தானே முன்வந்தும் வழங்கினார்.தனி ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியினை தனி ஒரு நபரின் தலைமையின் கீழ் களம் கண்டு அசத்த செய்கிறார்.


அரசியல் பணி:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்ற செயலாளரான  J.ஜெயகிருஷ்ணன், தற்போது செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினி மக்கள் மன்றத்தையும் கவனித்து வருகிறார்.இந்த மக்கள் மன்றத்தின் மூலம் ,மற்ற 4 மாவட்ட ரஜினி மக்கள் மற்ற செயலாளர்களுடன் இணைந்து 3000 திற்கு அதிகமான ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை ஜெயகிருஷ்ணன் களமிறக்கி பெரும்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் ஏரிகளில் உள்ள குப்பைகளை அகற்றியும்,அந்த ஏரிகள் முழுவதையும் சுத்தம் செய்தும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல்,இரவு பகலாக மக்களை துயரில் இருந்து பாதுகாக்கும் காவல் துறையினருக்கு 1000 முகக்கவசங்கள் வழங்கியும் பிரதிபலன் பாராது உழைத்து வருகிறார்.

“தொடக்கம் சிறிதென ஆயினும்,அதன் மாற்றம் பெரிதென மாறிடும்”

வாழ்வில் ஒருவர் செய்வதற்கும்,சொல்வதற்கும் வித்தியாசம் உண்டு.வெறுமனே வாய் சொல்லால் மட்டுமே சொல்லாமல் முன்னின்று முன்னோடியாக நடத்தி வருகிறார்.

இங்கு யாருக்கும் தெரியாமல் அமைதியாகவும், அழுத்தமாகவும் தான் செய்த செயலாய் தன்னை போன்று ஒவ்வொரு நபரும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஊரார் பிள்ளை என்று யாரையும் எண்ணாமல் ஊருக்கு பிள்ளையாய் நின்று உதவும் நல் உள்ளம் தான் ஜெயகிருஷ்ணன்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இந்தியா உடனான வணிகத்தை ரூ.73 ஆயிரம் கோடிக்கு அதிகரிக்க திட்டம் – வால்மார்ட் நிறுவனம்

Next Post

4,700க்கும் அதிகமான பணியிடங்கள்.. ரூ.93 ஆயிரம் வரை ஊதியம்.. 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Next Post

4,700க்கும் அதிகமான பணியிடங்கள்.. ரூ.93 ஆயிரம் வரை ஊதியம்.. 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version