
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு காலை உணவாக ரொட்டி, பால், பழம், முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், தேவாரம், உள்ளிட்ட 12 இடங்களில் இத்திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தேவாரம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தேவாரம் பகுதியில் அமைந்துள்ள மன வளர்ச்சி குன்றிய பள்ளியில் உள்ள மனவளர்ச்சி குறைந்துள்ள மாணவ மாணவிகள், ஏழை மாணவ மாணவிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பால் முட்டை ரொட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கித்தினர் கூறுகையில் , ” தளபதி புஸ்சி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் , தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி மாவட்ட தலைவர் பிரகாஷ் உத்தரவுபடி, தேவாரம் பகுதியில் உள்ள மனவளர்ச்சிக் குன்றிய மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கியுள்ளோம். தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களிலும் ஏழை மாணவர்களுக்கு பால், முட்டை, ரொட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்க உள்ளோம்” என்றனர்.