தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10ம் தேதி வெளியிடப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மாறாக, பள்ளி அளவில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்து இருந்தார். இந்நிலையில், வரும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலை 9.30 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள் பள்ளி மாணவர்கள் அளித்த கைப்பேசி எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள் அனுப்பப்படும்.
மேலும் மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆகஸ்ட் 17 முதல் 25-ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 17 முதல் 21-ந்தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.