தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சித்தமருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் அ.தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பல்வேறு மாவட்டங்களில் நேரில் சென்று சுகாதாரதப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்திய மருத்துவத்துறை சார்பில், பிரத்யேகமான சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருத்துவர்கள் முன்னின்று சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டத்திலும் 100 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், எல்லா மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும். ஏற்கனவே தமிழகத்தில் 18 பிரத்யேகமான சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தா