உரிமையாளருடன் சேர்ந்து நாய் ஒன்று விளையாட்டை ரசித்து பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எந்த ஒரு விளையாட்டு ரசிகனுக்கும் ஆட்டத்தின் முடிவு தெரிய உள்ள இறுதிகட்டத்தில் கால்கள் தரையில் தங்காது. அதிலும், முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டால் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடுவது உறுதி. ஆனால், விளையாட்டின் மீதான இந்த ஆர்வம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் உண்டு என அவ்வப்போது, சில நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன.
அந்த வகையில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் முடங்கியுள்ள சூழலில், பழைய போட்டி ஒன்றை டிவியில் உரிமையாளருடன் சேர்ந்து நாய் ஒன்று ரசித்து பார்க்கும் வீடியோ இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.
10 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், நாய் ஒன்று தன் உரிமையாளருடன் அமர்ந்து ஆர்வமுடன் விளையாட்டு போட்டி ஒன்றை பார்த்து வருகிறது. திரையில் விளையாட்டு வீரர்கள் இங்கும் அங்கும் ஓட, வர்ணனனையாளரின் பேச்சை கேட்டு ஓவர் குஷியான நாயும் இங்கும் அங்கும் ஆடிக் கொண்டும் ஷோஃபாவில் துள்ளிக் குதித்தும் போட்டியை ரசிக்கிறது. அந்த சமயத்தில், அதீத உற்சாகம் அடைந்த அந்த நாய் கொஞ்சம் ஓவராய் துள்ள ஷோஃபாவில் இருந்து கீழே கவிழ்ந்து விழுந்துள்ளது.
பார்க்க கொஞ்சம் பரிதாபமாக இருந்தாலும் கூட, விளையாட்டின் மீது அதற்கு இருக்கும் ஆர்வம் தான் பலரையும் கவர்ந்துள்ளது.