வெங்காயத்தின் விலை வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்தான் குறைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் தற்போது பெய்து வரும் கனமழையால், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் உற்பத்தி 15 முதல் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது. பண்டிகை காலம் வேறு நெருங்குவதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெங்காய அறுவடை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் தான் நடைபெறும் என்பதால், இந்த விலையேற்றம் அடுத்த ஆண்டு ஜனவரி ஆல்லது பிப்ரவரி மாதத்தில் தான் குறைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.