Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சையை ஊக்குவிக்க நடவடிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பேச்சு

July 29, 2020

தமிழகத்தில் கொரோனா காலத்தில்கூட 41 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ரூபாய் 30,500 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, நெருக்கடி காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வரும் 31-ந் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது முடிவுக்கு கொண்டு வரலாமா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர்!

ரயில் மார்க்கமாக புறப்பட்ட முதலமைச்சர்!

ஆர்.டி.ஓ.,விற்கு 1.15 கோடி அறிவித்த முதலமைச்சர்

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் தேவையான தளர்வுகளுடன் பொது முடக்கத்தை கவனமாகவும், பாதுகாப்பாகவும் அமல்படுத்தப்படுகிறது. வீடு, வீடாகச் சென்று காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து பி.சி.ஆர். சோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளிப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நமது மாநிலத்தில் தான் அரசின் சார்பாக 58, தனியார் சார்பாக 61 பரிசோதனை நிலையங்கள் என மிக அதிகமான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 24.7 லட்சம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 63,000 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தனியார் மையங்களிலும் பரிசோதனை செய்யப்படுகின்றது. இதற்கான கட்டணத்தை அரசே நிர்ணயித்துள்ளது. தற்போது மாநில அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து 54,091 படுக்கைகளும், கோவிட் சிறப்பு மையங்களில் 64,903 படுக்கைகளும் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 25,538 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

ஐ.சி.யூ. வசதி கொண்ட (தனியார், அரசு இரண்டும் இணைந்து) 3,962 படுக்கைகளும், 2,882 வென்டிலேட்டர்களும் பிரத்யேகமாக கோவிட் தொற்று சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோவிட் நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்க, கூடுதலாக 15,000 மருத்துவப் பணியாளர்கள் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 2,751 மருத்துவர்களும், 6,893 செவிலியர்களும் உள்ளடங்கியுள்ளனர். மிகவும் இன்றியமையாத மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன

மருந்துகள், பரிசோதனைக் கருவிகள், என்-95 முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், மும்மடி முகக்கவசம் ஆகியவற்றை தேவையான அளவு அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. நாட்டிலேயே மிகக் குறைவான, அதாவது 1.6 சதவீதம் உயிரிழப்பு மற்றும் சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் 73 சதவீதத்திற்கு மேல் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் மற்றும் அரசு காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் வேண்டுமெனில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணங்களையும் பொதுமக்கள் நலன் கருதி அரசு நிர்ணயம் செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டதில் பலர் பூரண குணமடைந்ததைக் கருத்தில் கொண்டு, அதனை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

4,18,903 வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும், 51,711 வெளிநாடு வாழ் தமிழர்களையும், வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாழும் மக்களுக்கு இலவச முகக்கவசங்கள், ஆகஸ்டு 5-ம் தேதி முதல் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும். இதுவரை 46 லட்சம் முகக்கவசங்கள் சென்னையிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஓ.பி.சி.யினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற – 13 தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Next Post

5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம்: புதிய கல்விக் கொள்கை…

Next Post

5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம்: புதிய கல்விக் கொள்கை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version