கொரோனவிற்கு சித்த மருத்துவ மருந்தினை பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து சித்த மருத்துவ செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தவு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்துவரும் நிலையில் இதற்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளில் தொடர் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை சிறந்ததாக இருக்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சித்த மருத்துவர் ஒருவர், கொரோனாவிற்கு தான் மருந்தினை கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை மக்களுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையில் நீதிபதிகள், கொரொனாவிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துவரும் நிலையில், இச்சிகிச்சைக்கு சித்த மருத்துவம் ஏற்புடையதா? என்பது குறித்து பதிலளிக்க சித்த மருத்துவ செயலர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.