ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி ஊழியர்கள் தாங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை முன்னிறுத்தி, ஆகஸ்ட்-20ல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து, அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் கூறியிருப்பதாவது,
கொரோனா காரணமாக வேலைக்குச் செல்வது மற்றும் தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிப்பது போன்றவற்றால் ஊழியர்கள் செய்வதறியாது குழம்பிபோய் உள்ளனர்.பொதுப் போக்குவரத்து சேவையும் இல்லாத காரணத்தால், ஊழியர்கள் பணிக்கு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள வழிமுறையில், ‘வங்கிகள் 100 சதவிகித ஊழியர்களுடன் வழக்கமாக செயல்படும்’ எனக் கூறியுள்ளது.இது ஊழியர்களிடையே மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
எனவே, ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதி செய்துத் தர வேண்டும்.போக்குவரத்துச் சேவை தொடரும் வரை 50 சதவிகித ஊழியர்களின் வருகையுடன் ஒரு பட்டியல் முறைத் தயார் செய்து, அதைப் பின்பற்ற வேண்டும்.மேலும், ஊழியர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.சிலர் தொற்றால் இறந்துமுள்ளனர்.எனவே பயம், மன அழுத்தம், கவலை மற்றும் பதற்றம் போன்ற உணர்வும் ஊழியர்கள் மத்தியில் காணப்படுவதால், வங்கி செயல்படும் நேரம், காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணியாகக் குறைக்கப்பட வேண்டும்.சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க நடிவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறுக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட்-20ல் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.