தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 5,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,132 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து 5,517 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,96,483 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 56,998 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 60,344 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 27 லட்சத்து 79 ஆயிரத்து 062 ஆக உள்ளது.
சென்னையில் இன்று 1,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,01,951 ஆக உள்ளது.