கோவையில் நாளை மாலை 5 மணி முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என அம்மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று கோவை மாவட்டத்தில் 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,966 ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கொரோனா தொற்று மேலும் மாவட்டத்தில் பரவாமல் இருக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கோவையில் நாளை மாலை 5:00 மணி முதல் 27 காலை 6:00 மணி வரை கோவையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் தேவையின்றி பொது வெளியில் நடமாடுபவர்கள் மீது காவல்துறையினர் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.