கோவை தெற்கு தொகுதி தான் அரசியல்வாதியாக நான் பிறந்த இடம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை :
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெரும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிய இருப்பதால் அனைத்து கட்சிகளும் முண்டியடித்து கொண்டு ஓட்டு கேட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அப்புகுதிகளில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது அவர், கோவை தெற்கு தொகுதி தான் அரசியல்வாதியாக நான் பிறந்த இடம். மத நல்லினத்திற்கு எதிராக நடக்கக்கூடிய சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காக இந்த தொகுதியை தேர்ந்தெடுத்தேன் என்றார்.
Read more – போடியில் துணை முதல்வர் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை…
மேலும், அரசியல்வாதிகள் எப்படி மக்களுக்காக இயங்க வேண்டும் என்ற வரைமுறையை காந்தியடிகள் எழுதி வைத்துள்ளார். அதன்படி தாம் செயல்படுவேன் என்றும், அரசு ஆசிரியர்களை போல், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்வோம் என்றும் தெரிவித்தார்.




