கூகுள் நிறுவனம் அதன் புதிய, ‘நெஸ்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்’ படத்தை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம், வீடுகளுக்கான ஸ்மார்ட் சாதனங்களை, ‘நெஸ்ட்’ எனும் பிராண்டு பெயரில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ‘அமேசான் எக்கோ’ ஸ்பீக்கர்களுக்கு போட்டியாக இந்த புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் வர இருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாகவோ, விலை எவ்வளவு என்பது குறித்தோ, எப்போது அறிமுகம் ஆகும் என்பது குறித்தோ எந்த தகவல்களையும் கூகுள் இன்னும் வெளியிடவில்லை. தற்போதைக்கு படத்தை மட்டுமே பகிர்ந்துள்ளது.
படத்தைப் பார்க்கும்போது, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, ‘கூகுள் நெஸ்ட் மினி’ போலவே இருக்கிறது. கூகுளின் இதற்கு முந்தைய தயாரிப்புகளான, ‘நெஸ்ட் மினி’, ‘நெஸ்ட் ஹப்’ ஆகியவை, இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், இந்த புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.