ட்ரீம் 11 நிறுவனம் ஊழியர்களின் விடுமுறை குறித்து கொண்டு வந்திருக்கும் புதிய விதி ஒன்று, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த விதியின்படி, விடுமுறையில் இருக்கும் ஊழியரை, வேலை சம்பந்தமாக சக ஊழியர்கள் யாரும் தொடர்புகொள்ளக்கூடாது என கூறியுள்ளது. அவ்வாறு தொந்தரவு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.