பிலிப்ஸ் நிறுவனம் இந்தியாவில் 4கே ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
50-இன்ச் (50PUT6604) மற்றும் 58-இன்ச்(58PUT6604) பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அனைத்து முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் இந்த சாதனங்கள் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவித்துள்ளது.
பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் டால்பி விஷன் அல்ட்ரா-விவிட் இமேஜிங் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. பிரீமியம் அனுபவத்தை வழங்க இந்த சாதனங்களில் எச்டிஆர்10 பிளஸ் அம்சத்தை கொண்டுள்ளது.
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட பிலிப்ஸ் ஸ்மார்ட் டிவி 8மில்லியனுக்கு அதிகமான பிக்சல்களை கொண்டுள்ளது. இதனால் தனித்துவமான தொழில்நுட்பம் நிறங்களை தனித்துவமாக வெளிப்படுத்தும். வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது பிலிப்ஸ் நிறுவனம்.

டால்பி விஷன் படம் மற்றும் டால்பி அட்மோஸ் ஒலியின் வசதி சிறந்த ஆடியோ அம்சத்தை வழங்குகிறது. இந்த 4கே யுஎச்.டி பிலிப்ஸ் எல்இடி டிவியை பொழுதுபோக்கு அதிகார மையமாக மாற்றுகிறது. இது தவிர நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், யூடியூப் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

பிலிப்ஸ் டி.வி.கள் எல்லையற்ற வடிவமைப்போடு வருகின்றன. இதனால் பிடித்த திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை திசைதிருப்பாமல் அனுபவிக்க முடியும்.
தற்போது அறிமுகம் செய்யப்பட்ட பிலிப்ஸ் 50-இன்ச் (50PUT6604) ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1,05,990. பிலிப்ஸ் 58-இன்ச் (58PUT6604) ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.1,19,990 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.