
எதிர்கால நாகரீகங்கள், நமது நவீன கலாச்சாரத்தைப் பற்றி அறிந்திருப்பதை விட பண்டைய எகிப்தியர்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், கல் சிற்பங்கள் இயற்கையாகவே நீண்ட காலம் நீடிக்கும், மற்றும் மொழித் தடைகள் ஒருபுறம் இருந்தாலும் கல்வெட்டு போன்றவற்றை படிக்க எந்த சிறப்பு தொழில்நுட்பமும் தேவையில்லை. அதே சமயம், எதிர்கால வரலாற்றாசிரியர்கள் யாரும் நமது பழைய Floppy Diskக்குகளை ஆராய்ந்து எந்த ஒரு பயனுள்ள தகவல்களையும் தெரிந்துகொண்டு விடப்போவதில்லை. அதற்கான தொழில்நுட்பமும் அப்போது அவர்களிடம் இருக்காது.

இதன் காரணமாக எதிர்கால மக்கள் நம்மை பற்றி அறிந்துகொள்வதற்காக நம்மை பற்றிய 21TB தகவல்கள் பாதுகாப்பான இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் இருக்கும் மக்கள் நம்மை பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு அமையும். இது ஆயிரம் ஆண்டுகள் வரை எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும். மக்கள் எதாவது பேரழிவில் சிக்கி அழந்தாலும் அவை பாதுகாப்பாக இருக்கும் வகையில் அந்த காப்பகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் பல ஆவண காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் போன்றவை இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நார்வேயில் உள்ள ஒரு தீவில் இந்த ஆவணக் காப்பகம் செயல்பட்டு வருகிறது, இதற்கு அருகில் உள்ள தீவில் தான் பல விதமான தாவர விதைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தகவல்கள் அனைத்தும் Polyester silver halaide மூலம் செய்யப்பட்ட பிலிம் ரீலில் சேமிக்கப்பட்டுள்ளது.

அதில் தகவல்கள் அனைத்தும் QRcode வடிவமைப்பில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இதே நிறுவனம் Tech Tree எனப்படும் ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளனர். இது எதிர்காலத்தில் தரவை மீட்டெடுக்க மக்களுக்கு உதவும், பார்வை மூலம் படிக்கக்கூடியதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.