அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சர்மிஸ்தா சென் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண், இவர் அங்கு பார்மசிஸ்டாக இருப்பதுடன் ஆராய்ச்சியாளராகவும் இருந்து வந்துள்ளார்.
தடகள வீராங்கனையாகவும் இருந்த சென், தினமும் காலையில் ஜாகிங் போகும் வழக்கம் கொண்டவராக இருந்துள்ளார்.
இதனிடையே, ஜாகிங் சென்ற அவரை காணவில்லை. மேலும் காணாமல் போன அவர் இறந்த நிலையில் லெகசி டிரைவ் பகுதியருகே கண்டெடுக்கப்பட்டார் . அவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதும் . இதனால் அவர் மரணம் அடைந்திருக்க கூடும் என தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், பகாரி அபியோனா (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னின் மறைவுக்கு, அவருடைய நண்பர்கள், அருகே வசிப்போர் மற்றும் வழிபோக்கர்கள் என நூற்றுக்கணக்கானோர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.