இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் நேற்று முன் தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு நில நடுக்கம்இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது.நில நடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின சேத விவரம் இன்னும் தெரியவில்லை.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.