அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக, ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.
ஜனநாயகக் கட்சி சார்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு, ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இதில் அதிபா் வேட்பாளராக, ஜோ பிடன் அதிகாரப்பூா்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஜோ பிடன் தனது டுவிட்டர் பதிவில், ‘அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி. ஜனநாயக கட்சியின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வது வாழ்க்கையில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்’ என்று பதிவிட்டுள்ளார்.




