கொரோனா தொற்று ஏற்பட்டு பெற்ற குழந்தையை 3 மாதங்களுக்கு பிறகு தாய் சந்தித்த தருணம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்கா :
அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில், மேடிசன் நகரில் கெல்சி என்ற பெண் 3 குழந்தைகளுக்கு பிறகு நான்காவது முறையாக கர்ப்பம் தரித்து கடந்த நவம்பர் மாதம் குழந்தையை பெற்றெடுக்க காத்திருந்தார்.
திடீரென கால்சிக்கு கொரோனா தாக்கப்பட்டதை தொடர்ந்து, அருகிலுள்ள செயின்ட் மேரி ஆஸ்பத்திரியில் நவம்பர் 4 ம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவரீதியில் மயக்க மருந்து அளிக்கப்பட்டு சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். கெல்சியின் உடலில் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருந்ததால் டிசம்பர் மாத இறுதியில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Read more – டெல்லி ஜாம் போராட்டத்தில் ஆணிக்கு பதிலடியாக பூச்செடி நட்ட விவசாயிகள்… குவியும் ஆதரவுகள்..
கெல்சி உடல்நிலை திடீரென குணமாகி இருந்த நிலையில் ஜனவரி மாதம் மத்தியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே கெல்சியின் கணவர் டெரக் டவுன்சென்ட் 3 மாத குழந்தைக்கு லூசி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார். ஏறத்தாழ 3 மாதங்களுக்கு பின்னர் குணம் அடைந்த கெல்சி வீடு திரும்பி குழந்தையை கொஞ்சி கூறியதாவது “
நான் உன்னை மிகவும் நேகிக்கிறேன். நான் உன்னை வெகுவாக தவறவிட்டு விட்டேன் தெரிவித்தார். மேலும், எனக்கு எல்லாமே என் குடும்பம்தான் என்று தெரிவித்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.