ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தை பவுடர் தயாரிப்புக்கான உரிமத்தை மகாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்த ஆய்வக சோதனையின் போது ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடர் மாதிரிகள் நிலையான பிஎச் (ph) மதிப்புக்கு ஒத்துபோகவில்லை. மேலும், இது பிறந்த குழந்தைகளின் தோலை பாதிக்கலாம் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜான்சன் நிறுவனத்திற்கான உரிமத்தை மகாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது.
இதனை தொடர்ந்து எப்டிஏ, ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு மருந்து மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகளின் கீழ் ஒரு நோட்டீஸை அனுப்பியுள்ளது. அதில், சந்தையில் இருக்கும் குழந்தை பவுடர் இருப்பை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.