நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தெலுங்கில் மாபெரும் வசூல் சாதனை படைத்த “அலு வைகுண்ட புறம்”படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழில் சின்னத்திரையில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா துறைக்கு வந்த சில காலத்திலேயே முன்னணி நடிகராக வந்தார், இவர் நடிக்கும் பெரும்பாலான பாடங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததால் தயாரிப்பாளர்களின் தேர்வும் சிவகார்த்திகேயன்னாக இருந்தது.

பல வெற்றி படங்கள் கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சீமராஜா, mr. லோக்கல் போன்ற படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் சறுக்கலை கொடுத்தது அதனால் மூன்றாவது முறையாக பாண்டிராஜ் உடன் “நம்ம வீட்டு பிள்ளை”என்ற குடும்ப பாங்கான படத்தில் நடித்தார் இது மீண்டும் சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர் அந்தஸ்தை கொண்டு வந்தது.
ஆனால் அடுத்து நடித்த ஹீரோ திரைப்படம் தோல்வி மீண்டும் அவருக்கு சறுக்கலை உருவாக்கியுள்ளது, இதனால் நல்ல கதை அம்சம் மற்றும் குடும்பங்கள் விரும்பும் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார் தற்பொழுது நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “டாக்டர்ஸ்”படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.

மேலும் அயலான் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் இதனிடையே தெலுங்கில் இந்த வருடம் வசூல் சாதனை புரிந்த அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த அலு வைகுண்ட புறம் படத்தின் உரிமையை சிவகார்த்திகேயனின் எஸ். கே. ப்ரோடுக்ஷன் கைபற்றி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அயலான் படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடிப்பார் என தகவல் கிடைத்துள்ளது இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.