துபாய்: நாம் பொழுதுபோக்கு அல்லது ஊர் சுற்றுவதற்கு அமீரகம் வரவில்லை. மாறாக, கிரிக்கெட் விளையாடுவதற்கே இங்கு வந்திருக்கிறோம் என்று சக வீரர்களுக்கு தெரிவித்துள்ளார் விராத் கோலி.

ஐபிஎல்2020 தொடருக்கான பாதுகாப்பு வளையம் என்பது அனைவராலும் பின்பற்றப்பட்டு மதிக்க வேண்டிய ஒன்றாகும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோலி.அவர் தெரிவித்துள்ளதாவது, “ஐபிஎல்2020 தொடரில் பங்கேற்பதற்காகவே இங்கு (அமீரகத்திற்கு) அனைவரும் வந்திருக்கிறோம். எனவே, இதற்காக வழங்கப்பட்ட நமக்கு கொடுத்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றுவது மிகவும் முக்கியமான அவசியமான ஒன்றாகும்.

நாம் நமது பொழுதுபோக்கிற்காக ஊர் சுற்றுவது ஒரு இல்லை குதூகலமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்கு தற்போது இங்கு வரவில்லை பாதுகாப்பு வளையத்தை நாம் எப்பொழுதுமே விடக்கூடாது என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை மட்டும் முறையாக பின்பற்றினால் போதும்; தேவையில்லாத செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஐபிஎல் நடக்குமா? என்பதே தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது ஐபிஎல் சாத்தியமாகி இருக்கிறது. ஆகவே இதனை சிறந்த முறையில் சிறப்பாக நமது பங்களிப்பை அளித்து நடத்திக் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் முதல் கடமையாகும் என்றார் கோலி.




