சென்னை கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் கோவளம் இடையே அதிக காற்று வீசி வருகிறது. விட்டு விட்டு காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சென்னை மாநகரம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இன்று இரவு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் பயங்கர காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.